×

வெடி பொருட்கள் 380 கிலோ பறிமுதல்

 

ராஜபாளையம், ஜூலை 3: ராஜபாளையம் அருகே அழகாபுரி சாலையில் உள்ள தகர கொட்டகையில் அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மேல ராஜகுலராமன் கிராம நிர்வாக அலுவலர் கணேசன் கீழராஜ குலராமன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பூமா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது வெடிபொருட்களுக்கு பயன்படுத்தப்படும் சல்பர் கரி, வெடி உப்பு உள்ளிட்ட 380 கிலோ வெடி பொருட்களை போலீசார் கைப்பற்றினர். அரசு அமைதி இன்றி சட்டவிரோத தயாரிப்பில் ஈடுபட்டதாக சிவகாசி அருகே உள்ள சிந்துராஜபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அருண்குமார்(23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Rajapalayam ,Alagapuri Road ,Ganesan ,Mela Rajakularaman ,Keelarajakularaman police station.… ,
× RELATED உணவகத்தில் அதிகாரிகள் சோதனை தரமற்ற 42...