×

கட்சி பெயர், சின்னம் யாருக்கு? மம்தா, எதிர்தரப்புக்கு தேர்தல் கமிஷன் கெடு: ஜூலை 6க்குள் விளக்கம் அளிக்க உத்தரவு

புதுடெல்லி: மேற்கு வங்க பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அக்கட்சியின் எம்எல்ஏக்கள் 64 பேர் தனியாக பிரிந்துள்ளனர். அதிருப்தி கோஷ்டி தலைவர் ரிதப்ரதா பானர்ஜியை பேரவை எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் அங்கீகாரம் அளித்துள்ளார். இந்த நிலையில், கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக திரிணா எம்எல்ஏக்கள் 10 பேர் அடங்கிய குழுவினர்,டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி, சுக்பீர்சிங் சாந்து ஆகியோரை நேற்று சந்தித்து பேசினர்.

அப்போது, உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தாங்கள் தான் என்று தேர்தல் ஆணையத்திடம் அவர் கேட்டுக் கொண்டார். இதற்கிடையே அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவர்கள் மற்றும் கட்சியின் அமைப்பு ரீதியான தேர்தல்கள் தொடர்பான தங்கள் தரப்பு வாதங்களையும், எதிர்த்தரப்பு வாதங்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் கருத்துகளையும் சமர்ப்பிக்குமாறு திரிணாமுல் காங்கிரஸின் இரு பிரிவினரிடமும் தேர்தல் ஆணையம் நேற்று கேட்டுக்கொண்டது.

மம்தா பானர்ஜி மற்றும் அதிருப்திப் பிரிவுத் தலைவரான ரிதாப்ரதா பானர்ஜி ஆகிய இருவருக்கும் தேர்தல் ஆணையம் கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும், ஜூலை 6-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் தங்கள் பதில்களைச் சமர்ப்பிக்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Mamata ,Election Commission ,New Delhi ,Trinamool Congress ,West Bengal Assembly ,Ritabrata Banerjee ,
× RELATED கேரள அரசின் அனுமதி இல்லாமல் விழிஞ்ஞம்...