×

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒடிசா தொழிலாளி பலி

 

கோவை, ஜூலை 2: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் துனா பெஹரா (40). இவர் கோவை விளாங்குறிச்சியில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்ட் கட்டிட கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஜூன் 21ம் தேதி இரவு, துனா பெஹரா மதுபோதையில் அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தின் உயரத்தில் வேலை செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags : Odisha ,Coimbatore ,Duna Behera ,Vilankurichi, Coimbatore ,
× RELATED பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி...