திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா மீது பாஜவினர் முட்டை வீச்சு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாடியா மாவட்டத்தில் காளிகஞ்ச் பகுதியில் உள்ள பலாஷியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ அலிபா அகமதுவின் வீட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திரிணாமுல் எம்பி மஹூவா மொய்த்ரா சென்றார். அப்போது அவர் மீது முட்டை வீசப்பட்டதாக தெரிகிறது.

இது குறித்து எம்பி மஹூவா மொய்த்ரா கூறுகையில்,” அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்கள் திரும்பி போ என்று முழக்கமிட்டனர். மேலும் அவர்கள் என் மீது முட்டைகளை வீசியதோடு திருடன் என்றும் என்று முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தை பாஜவினரே திட்டமிட்டு நடத்தியுள்ளனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. காவல்துறை மவுன சாட்சியாக உள்ளது. இப்போது பாஜவினர் என் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: