மணிப்பூரில் கையெறி குண்டு வீசிய தீவிரவாதிகள் உட்பட 3 பேர் கைது

இம்பால்: மணிப்பூரில் வீடுகளின் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்ட 2 தீவிரவாதிகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இம்பால் கிழக்கு மாவட்டம், பிரம்மபூர் பகுதியில் உள்ள வீடுகள் மீது கடந்த 29ம் தேதி கையெறி குண்டுகள் வீசப்பட்டன. அதே போல் இம்பால் மேற்கு மாவட்டத்திலும் கையெறிகு ண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சாவோம்பங்க் என்ற இடத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பை சேர்ந்த சோரோகைபம் ரோஹித் மெய்டீ(24), சலாம் யாய்பாபா மெய்டீ(20) மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூன்று பேருக்கும் ஒரு கும்பல் 6 கையெறி குண்டுகளை கொடுத்துள்ளது. இதை வாங்கி வந்த 3 பேரும், வீடுகளின் மீது 5 கையெறி குண்டுகளை வீசியுள்ளனர். அவர்களிடம் இருந்த ஒரு கையெறி குண்டு,2 மோட்டார் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: