ஊழல் செய்தோரை தேடித்தேடி சேர்க்கும் தவெக: இயக்குனர் அமீர் கடும் தாக்கு

சென்னை: ஊழல் செய்த எல்லோரையும் தேடித் தேடி தவெகவில் சேர்த்து வருகின்றனர் என இயக்குனர் அமீர் கூறியுள்ளார். அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் 6 பேர் திடீரென ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். வீரமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோரும் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். இதற்கிடையே எஸ்.பி.வேலுமணி தவெகவில் இணைவதாக பேச்சு எழுந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக திரைப்பட இயக்குனரும் நடிகருமான அமீர் கூறும்போது, ‘‘ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அதிமுகவினரை தவெகவில் சேர்த்துக் கொள்வதே ஊழல் ஒழிப்பு என்று நினைக்கின்றனர். ஊழல் செஞ்ச யாரையும் விட மாட்டோம். எல்லோரையும் தேடித் தேடி எங்க கட்சியில் சேர்த்துக்கொள்வோம் என்ற ரீதியில் தவெக செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது’’ என அவர் காட்டமாக தெரிவித்துள்ளார். தவெக அரசுக்கு எதிராக குரல் கொடுக்க திரையுலகினர் பலரும் தயங்கும் நிலையில் துணிச்சலாக இயக்குனர் அமீர் பேசியிருக்கும் இந்த விஷயத்தை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: