×

பலத்த சூறைக்காற்று காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

 

தூத்துக்குடி, ஜூலை 1: மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து, கடந்த ஜூன் 15ம் தேதி முதல் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்று வந்தனர். தற்போது மீன்பாடு அதிகமாக இருந்து வந்ததால், விசைப்படகு உரிமையாளர்களும், மீனவர்களும் தொழில் ரீதியாகச் சாதகமான சூழலில் இருந்து வந்தனர். தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் காலை 5 மணிக்கு விசைப்படகுகளில் கடலுக்குப் புறப்படும் மீனவர்கள், இரவு 9 மணிக்கு கரை திரும்புவது வழக்கம்.இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. கடல் சீற்றத்தால் விசைப்படகுகளை செலுத்துவதிலும், மீன் பிடிப்பதிலும் மீனவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து விசைப்படகு உரிமையாளர்கள் அவசரக் கூட்டம் நடத்தினர். அதில், கடலில் தற்போது மணிக்கு 60 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், பாதுகாப்பு கருதி செவ்வாய்க்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் தூத்துக்குடியில் சுமார் 272 விசைப்படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டன.

Tags : Thoothukudi ,
× RELATED ஸ்கூட்டர் டிக்கியில் வைத்திருந்த...