மதுரை அழகப்பன் நகரில் உள்ள அன்னை தெரசா கல்லூரியின் தாளாளர் டாக்டர் கண்ணன் கூறியதாவது: எங்கள் கல்லூரி, தற்போது 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2026-2027ம் கல்வி ஆண்டிற்கான அட்மிஷன் நடைபெற்று வருகிறது. எங்கள் கல்லூரியில் கட்டணமின்றி பயிற்சி அளிப்பதுடன் சீருடையும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 10ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் சேரலாம். இங்கு பி.எஸ்சி ஓட்டல் மேனேஜ்மெண்ட், பி.எஸ்சி லேப் டெக்னீசியன், பி.எஸ்சி தியேட்டர் டெக்னீசியன், டிப்ளமோ நர்சிங், லேப் டெக்னீசியன், கேட்டரிங், அழகுக்கலை பயிற்சி, ஏ.சி மெக்கானிக், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன், ஆபரேசன் தியேட்டர் டெக்னீசியன். இ.சி.ஜி. மற்றும் எக்ஸ்ரே ஆகிய பிரிவுகளில் 1 மற்றும் 2 வருட பட்டப்படிப்பிற்கு அட்மிஷன் நடைபெறுகிறது.
இக்கல்லூரியில் ஆண்கள்மற்றும் பெண்களுக்கு தனித்தனி விடுதி வசதி உள்ளிட்டவை இருப்பது தனிச்சிறப்பாகும். மேலும் படித்துக்கொண்டு இருக்கும்போதே ஊதியத்துடன் பகுதிநேர வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இது மருத்துவமனையுடன் கூடிய கல்லூரி என்பதுடன் இந்திய அரசு சான்றிதழ் பெற்றது என்பதால், இங்கு படித்தவர்களுக்கு தரமான தனியார் மருத்துவமனைகள் மற்றும் 108 ஆம்புலன்ஸ், நட்சத்திர ஓட்டல்கள். கப்பல், விமானம் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இக்கல்லூரியில் சேரும் மாணவர்கள் தேர்வு கட்டணம் மற்றும் அரசு பதிவு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். இதனையும் தவணை முறையில் செலுத்தும் வசதி உள்ளது.
மேலும், தமிழகத்திலுள்ள பிரபல மருத்துவமனைகள், தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை, தமிழகத்தின் சிறந்த நட்சத்திர ஓட்டல்கள், தனியார் தொழில் நிறுவனங்களில் எங்கள் கல்லூரியில் பயின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 98421 95715, 0452-5943 555 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதே எங்களின் இலக்கு. இவ்வாறு டாக்டர் கண்ணன் கூறினார்.
