×

தாளவாடியில் ஊருக்குள் புகுந்து வீட்டின் முன்பு இருந்த நாயை வேட்டையாடிய சிறுத்தை

 

சத்தியமங்கலம், ஜூலை 1: தாளவாடி மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்து வீட்டின் முன் இருந்த நாயை வேட்டையாடிய சிறுத்தை வீடியோ வைரலாகி வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் வனத்தில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் ஊருக்குள் நுழைந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை சூசையபுரம் கிராமத்தை ஒட்டி உள்ள விவசாய தோட்டத்தில் நுழைந்து அங்கு வீட்டின் முன் காவல் இருந்த நாயை வேட்டையாடியது.

இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது. நாயை சிறுத்தை வேட்டையாடிய சம்பவம் தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

Tags : Thalavadi ,Sathyamangalam ,Erode district ,
× RELATED கொடுமுடி பஸ் நிலையம் அருகே தீ விபத்து