×

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடவில்லை: நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் பேசியிருப்பதாவது: திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை. அது தர்மமாக இருக்காது. அதே நேரத்தில், வேறு எந்த தொகுதியிலும் நான் போட்டியிட மாட்டேன் என்றும் சொல்லவில்லை. திருச்சி கிழக்கில் யாரை நிறுத்த வேண்டும் என்று முதல்வர் விஜய் முடிவு செய்வார்.

மக்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதனால் எனது அம்மா அதிகம் வேதனைப்பட்டார். எனவேதான் இந்த அரசியல் வேண்டாம் என்று நான் சொல்கிறேன் என்று, அவர் என்னிடம் சொன்னார். வயதாவதால் அவருக்கு அதிகம் சொல்லி புரியவைக்க முடியாது. எனினும், எனது தாய் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக இந்த வீடியோவை வௌியிடுகிறேன். நான் மக்களை பற்றி தவறாக பேசவில்லை.

Tags : Trichy East ,Raghava Lawrence ,Chennai ,Trichy… ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில்...