வேலூர்: பேரணாம்பட்டு பகுதியில் வீட்டில் கைகள் அறுக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. வீட்டில் கைகள் அறுக்கப்பட்டு கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த தனலட்சுமி(30) என்பவரின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து அவரது கணவர் விஜயகுமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
