கோவில்பட்டி, ஜூன் 30: கோவில்பட்டி அருகே புகையிலை பொருட்கள் வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார், அய்யனேரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மகன் விஜய் (28), காளியப்பன் மகன் சமுத்திரராஜன் (63) மற்றும் ராஜ்குமார் மகன் மாரிக்கண்ணன் (25) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 71 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
