சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நலன் கருதி 2026-27ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்த அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் ஆகியோருக்கு 2026-27ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு ஆன்லைன் வாயிலாக ஜூன் 30 முதல் ஜூலை 7 விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள விரும்பும் அரசு கல்லூரி ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் www.dcetransfer.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
