×

அருணாச்சலபிரதேசத்தில் தொடர் கனமழை, வௌ்ளம்

 

இடாநகர்: அருணாச்சலபிரதேசத்தில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். வீடுகள், பாலங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. அருணாச்சலபிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வௌ்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கெயி பன்யோர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி 2 பெண், ஒரு ஆண் உள்பட 3 பேர் பலியாகினர். கீழ் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் உள்ள சிசிரி ஆற்றில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டு 9 பேர் அடித்து செல்லப்பட்டு மாயமாகினர்.அவர்களில் 4 பேரை இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் நேற்று மீட்டது. பல இடங்களில் சாலைகளையும், பாலங்களையும் வௌ்ள நீர் அடித்து சென்றுள்ளது.

Tags : Arunachal Pradesh ,Itanagar ,
× RELATED பெட்ரோல், டீசல் விற்பனைக்கான...