×

காயத்தால் போட்டியில் பங்கேற்காத நிலையில் நடிகையுடன் ஹர்திக் பாண்டியா ரகசிய திருமணம்: தேனிலவு கொண்டாட்ட வீடியோ வைரல்

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிற்கும் நடிகை மஹிகா சர்மாவிற்கும் ரகசிய திருமணம் நடந்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா (31), தொடை தசைநார் காயம் காரணமாக தற்போது போட்டிகளில் விளையாடாமல் ஓய்வில் உள்ளார். இதன் காரணமாக அவர் அண்மையில் நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை. மேலும், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியிலும் அவர் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை.

சமீப மாதங்களாகவே ஹர்திக் பாண்டியா மற்றும் நடிகை மஹிகா சர்மா ஆகியோரை இணைத்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வந்தன. இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள மா உனகுலேஸ்வரி கோயிலில் ஹர்திக் பாண்டியாவும் நடிகை மஹிகா சர்மாவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக ஒரு வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தை முடித்துவிட்டு இருவரும் தேனிலவுக்காக ஜெய்ப்பூர் சென்றுள்ளதாக அந்த வீடியோவில் தகவல் பகிரப்பட்டுள்ளது. பாரம்பரிய உடையில் இருவரும் இருக்கும் காட்சிகள் இந்த வதந்தியை மேலும் அதிகரித்துள்ளது. இருப்பினும், இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

‘ரசிகர்களின் பக்கங்கள் மற்றும் போலி கணக்குகள் மூலம் இந்த வீடியோக்கள் பரப்பப்படுகின்றன’ என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

Tags : Hardik Pandya ,Honeymoon ,Ahmedabad ,Mahika Sharma ,
× RELATED டெல்லி பாஜக அரசு அறிவித்துள்ள மின்சார...