அவரு ஆந்திராக்காரரு… கர்நாடகா இல்லீங்க… டெல்லி பிரதிநிதி தமிழ்நாட்டில் வேலை பார்க்கப்போவதில்லை: அமைச்சர் நிர்மல்குமார் புதுவிளக்கம்

மதுரை: டெல்லி பிரதிநிதி தமிழ்நாட்டில் வேலை பார்க்கப் போவதில்லை என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத் துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நேற்று நடந்தது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், எம்எல்ஏக்கள் கல்லாணை, தங்கபாண்டியன், கார்த்திகேயன், கோபிசன், விஜய், எம்பி வெங்கடேசன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் நிர்மல்குமார், அளித்த பேட்டி:

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி கர்நாடகாவைச் சேர்ந்தவர் அல்ல. கர்நாடகாவில் தொழில் செய்கிறார். அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். டெல்லி பிரதிநிதி பெரிய முடிவுகளுக்கு அனுமதி கொடுக்கப் போகிறாரா? பெரிய முடிவுகளை எடுக்க போகிறாரா? எந்த இடத்திலும் தவறான நபருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு இந்த பொறுப்பெல்லாம் பெரியது கிடையாது. இவர் தமிழ்நாட்டில் வேலை பார்க்கப் போவதில்லை. டெல்லியில் தானே வேலை பார்க்கப் போகிறார். டெல்லியில் ஒரு பிரதிநிதியாக ஒருங்கிணைப்பு செய்ய போகிறார்.

நம்பிக்கையானவர், தெரிந்தவர். யாரும் இதனை தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்டது. பல அழுத்தங்களை தாண்டி எங்களுடைய தலைவருடன் இருப்பவர் அவர், அவருக்கு பணம், பொறுப்பு பெரிய விஷயம் கிடையாது. கர்நாடகத்தை சேர்ந்தவர் என்று அரசியலுக்காக சொல்கிறார்கள். இதை பூதாகரமாக்க ஒன்றுமில்லை. யார் யாரெல்லாம் எந்த பொறுப்புக்கு தகுதியானவர்களோ, அவர்களை நியமித்திருக்கிறார்கள்.

பொருத்தமில்லாதவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்களுக்கு சலுகை கிடையாது என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விரைவில் மேல்முறையீடு செய்யவுள்ளோம். அதற்கான வேலைகளை துவங்கி விட்டோம். உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குறிப்பிட்டதை பொதுவெளியில் பேச வேண்டாம் என நினைக்கிறேன். இவ்வாறு கூறினார்.

* ‘செங்கோட்டையனுக்கு பதற்றம்’
அமைச்சர் நிர்மல்குமார் மேலும் கூறுகையில், ‘‘பள்ளி மாணவர்களின் ஐடி கார்டில் சாதி இடம்பெறும் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சாதி பெயர் இடம் பெறப்போவதில்லை. அந்த மாதிரியான எந்த திட்டமும் கிடையாது. செங்கோட்டையன் சொல்லும்போது வார்த்தையை மட்டும் தவறாக குறிப்பிட்டுள்ளார் பதற்றத்தில் சொல்லிவிட்டார். அதில் ஒரு விஷயம் மட்டும் மிஸ் ஆகிவிட்டது. அவர் சொல்லும்போது அது தவறுதலாகி விட்டது’’ என்றார்.

Related Stories: