×

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.640 கூடியது: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

 

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து 1,05,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 3 நாட்களாக கணிசமாக அதிகரித்தும் குறைந்தும் வந்தது. கடந்த 23ம் தேதி ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 560-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 480-க்கும் விற்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.210-ம், பவுனுக்கு ரூ.1,680-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 350-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,680 குறைந்து ஒரு பவுன் ரூ.1,05,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.210 குறைந்து ரூ.13,140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தை போல வெள்ளி விலையும் நேற்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.230-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து 1,05,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து 13,220 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,
× RELATED இந்தியாவில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் விலை திடீர் உயர்வு.!!