- Cholavaram
- திருவள்ளூர்
- சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை
- சென்னை
- ஆந்திரப் பிரதேசம்
- திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர்: சோழவரம் அருகே சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு புறப்பட்ட ஆம்னி பேருந்து, சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே காரனோடை பகுதியில் வந்துகொண்டிருந்தபோது இன்று காலை தீ விபத்தில் சிக்கியது.
பேருந்தில் இருந்து புகை வருவதைக் கண்ட ஓட்டுநர், உடனடியாக சாலையோரம் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் படையினர், போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தால் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
