சென்னை: இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நேற்று வெளியிட்ட அறிக்கை: 2025ம் ஆண்டுக்கான அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் நேரடி நியமனங்கள் தொடர்பான நடைமுறைகள் அனைத்தும் உரிய அரசாணை விதிமுறைகளின் படியும், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வர்களின் அனைத்து அசல் சான்றிதழ்களும் சான்றிதழ் சரிபார்ப்பின்போது நேரடியாக ஆய்வு செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
