×

சூரியவன்ஷிக்கு தனியறை

லண்டன்: இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 15 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு தனியறை ஒதுக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் சூரியவன்ஷி. அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகள் பெல்பாஸ்ட் நகரில் ஜூன் 26 மற்றும் ஜூன் 28ம் தேதி நடைபெற உள்ளன.

அதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா மோதும். இந்த நிலையில், சூரியவன்ஷிக்கு தனியறை ஒதுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி விதிமுறைகளின் படி 16 வயதுக்கு குறைவான வீரர்களுக்கு தனியறை ஒதுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மற்றும் சமீபத்தில் இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் அமர்க்களப்படுத்திய சூரியவன்ஷி, முதல் முறையாக சீனியர் அணிக்காக சர்வதேச போட்டியில் அறிமுகமாக உள்ள அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்களிலும் அதிரடியைத் தொடர்வாரா என உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags : Suryavanshi ,London ,England Cricket Board ,Vaibhav Suryavanshi ,Ireland ,England ,T20 ,Ireland… ,
× RELATED மகளிர் டி.20 உலக கோப்பை; கட்டாய வெற்றி...