தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் அருகே கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். பொட்டல்புதூர் -தென்காசி சாலையில் கனிம வள லாரி அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பகல் நேரத்தில் சென்றதால் பொதுமக்கள் சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களின் மறியலால் தென்காசி நெல்லை இணைப்பு சாலையில் 6 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.
