ஆலோசனை கூட்டம்

நாமக்கல்,  மார்ச் 9: நாமக்கல் மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக கலெக்டர்  தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நகைக்கடை, ஜவுளிக்கடை, பாத்திரக்கடை  மற்றும் செல்போன் கடை உரிமையாளர்கள், தங்கள் நிறுவனத்தில் நடைபெறும்  தினசரி விற்பனை பற்றிய விபரங்களை, வணிகவரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க  வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் நகை,  ஜவுளி, பாத்திரம் மற்றும் செல்போன் வணிகம் செய்வோர், அந்தந்த சரகத்தில்  உள்ள வணிகவரி அலுவலங்களுக்கு இ-மெயில் மூலம், தினசரி விற்பனை விபரங்களை  மதியம் 1 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்  பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.

Related Stories: