திமுக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்

குமாரபாளையம், மார்ச்  9: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, குமாரபாளையத்தில் திமுக மகளிரணி  நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். நகர திமுக பொறுப்பாளர் செல்வம்,  பெண்களுக்கு வாழ்த்து கூறி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பள்ளிபாளையம்  பிரிவு சாலை, ஆனங்கூர் பிரிவு சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில்  திமுக மகளிர் அணியினர், பெண் பயணிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு  இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் நகர திமுக  மகளிர் அணி அமைப்பாளர் ராதிகா சக்திவேல், துணை அமைப்பாளர்கள் செல்வி, தேவி  மணி, சரஸ்வதி, விஜயா, தனம் மற்றும் நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள்,  மாவட்ட, நகர இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள்

கலந்துகொண்டனர்.

Related Stories:

>