பாச்சல் ஊராட்சியில் குடிநீர் குழாய்களை புதுப்பிக்க வேண்டும் கலெக்டரிடம் மக்கள் மனு

சேந்தமங்கலம், மார்ச் 9: புதுச்சத்திரம் ஒன்றியம், பாச்சல் ஊராட்சி ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நேற்று கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பாச்சல் ஆதிதிராவிடர் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து, தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணறுகளில் போதிய தண்ணீர் வசதி உள்ளதால், பெரும்பாலான நேரங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் இருந்து கொண்டே உள்ளது. கோடைக்காலத்தில் கூட இந்த பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதில்லை. ஆனால், ஆங்காங்கே குழாய் உடைந்துள்ளதால், தினமும் ஏராளமான லிட்டர் குடிநீர் வீணாகிறது. எனவே, உடைந்த குழாய்களை அகற்றி விட்டு, புதிதாக குழாய் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: