துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

பரமத்திவேலூர்,  மார்ச் 9:  சட்டமன்ற தேர்தலையொட்டி பரமத்திவேலூரில் போலீசார் தலைமையில், நேற்று துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். சட்டமன்ற தேர்தலையொட்டி பொதுமக்களிடையே அச்சத்தை போக்கவும், சட்டம் ஒழுங்கை  உறுதிப்படுத்தவும், காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பதை  பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், மாநிலம் முழுவதுமாக கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பரமத்திவேலூரில் நேற்று துணை  ராணுவப் படையினர் மற்றும் காவல் துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொடி  அணிவகுப்பு நடத்தினர்.பரமத்திவேலூர் டிஎஸ்பி ராஜாராணவீரன்,  கொடியசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தார். பரமத்திவேலூர் பழைய பேருந்து  நிலையத்தில் தொடங்கிய அணிவகுப்பு சுல்தான்பேட்டை, புதிய பேருந்து நிலையம்,  கடைவீதி, திருவள்ளுவர் சாலை, நான்கு ரோடு, பழைய பைபாஸ் சாலை  வழியாக சென்று  பள்ளி சாலையில்

நிறைவடைந்தது.

Related Stories: