பெலத்தூர் கரகதம்மா தேவி கோயில் கும்பாபிஷேக விழா

ஓசூர், மார்ச் 9:ஓசூர் அருகே பெலத்தூர் கரகதம்மா தேவி கோயிலில், நேற்று 5ம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் தீப உற்சவ விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கரகதம்மா தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கணபதி பூஜை, கோ பூஜை, வாஸ்து ஹோமம், கலச பூஜைகள் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப உற்சவத்தில் ஊர்வலம் நடைபெற்றது. விழாவில் ஓசூர், பாகலூர் உள்ளிட்ட பகுதியில் இருந்தும், கர்நாடக, ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா கெம்பண்ணா மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories:

>