பாலக்கோடு அருகே விவசாயியிடம் ₹1 லட்சம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை

காரிமங்கலம், மார்ச் 9:  பாலக்கோடு அருகே, உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ₹1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மதியம் பாலக்கோடு அருகே, ஆரதனஅள்ளி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி குருபிரசாத், வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது பாலக்கோடு பி.செட்டிஅள்ளியை சேர்ந்த மணிவண்ணன் விவசாயி, டூவீலரில் வந்தார். அவரை நிறுத்தி சோதனை செய்ததில், அவரிடம் ₹1 லட்சம் இருந்தது. அதற்கு உரிய ஆவணமில்லாததால், பணத்தை அதிகாரி பறிமுதல் செய்தார். விசாரணையில், வங்கியில் நகையை அடகுவைத்து விட்டு கொண்டு வந்த பணம் ₹1 லட்சம் என கூறினார். ஆனால் அதற்கு உரிய ரசீது இல்லாததால், பணம் பறிமுதல் செய்யப்பட்ட. உரிய ஆவணம் கொண்டு வந்து பணத்தை பெற்றுச்செல்லலாம் என அதிகாரி கூறினார்.

Related Stories:

>