கேரம் விளையாட அழைத்து 2 சிறுமிக்கு பாலியல் சீண்டல்: பங்க் ஊழியருக்கு தர்மஅடி

 

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட சமயபுரம் அருகே குடிசை மாற்றுவாரியம் குடியிருப்பை சேர்ந்தவர் தாஸ் (42). இருங்களூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வரும் இவர், நேற்றுமுன்தினம் அதேபகுதியில் வசித்து வரும் 10 மற்றும் 13 வயது சிறுமிகளிடம் கேரம்போர்டு விளையாடலாம் என கூறி வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக 2 பேரும் நடந்த விபரத்தை பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள், தாஸை பிடித்து அடித்து உதைத்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து தாஸை நேற்று கைது செய்தனர்.

Related Stories: