கலெக்டர், எஸ்பி அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

தர்மபுரி, மார்ச் 9: தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சர்வதேச மகளிர் தின விழா கலெக்டர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் கார்த்திகா மகளிர் தின கேக் வெட்டி வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ‘அனைத்து மகளிரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். ஓட்டுக்காக பணம் பெறுவதை தவிர்க்க வலியுறுத்த வேண்டும். சிறந்த ஜனநாயகத்தை உருவாக்க அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று உறுதி கொள்வோம்.

பல்வேறு சோதனைகளைத் தாண்டி பெண்கள் சாதனைகளை படைக்க வேண்டும்,’ என்றார். பின்னர், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் மகளிருக்கு மகளிர் தினம் தொடர்பான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. விழாவில் நூற்றுக்கணக்கான மகளிர் பங்கேற்றனர். அதேபோல், எஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் சார்பில், மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் எஸ்பி பிரவேஷ்குமார் பெண் பணியாளர்களுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிகள் புஷ்பராஜ், அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>