120 தொழிலாளர்கள் திமுகவில் இணைந்தனர்

தர்மபுரி, மார்ச் 9: தர்மபுரி மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் அரூர், கடத்தூர் கோட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள், திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், நிர்வாகி மாரியப்பன் தலைமையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 120 பேர் திமுகவில், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எஎல்ஏ முன்னிலையில் இணைந்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் தங்கமணி, நாட்டான் மாது, சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ரகீம், இலக்கிய அணி அமைப்பாளர் பொன்.மகேஸ்வரன், ஒன்றிய செயலாளர் சௌந்தர்ராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>