சென்னை: தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் காவல்துறை தலைமையகத்தின் ஏடிஜிபியாக ஆயுஷ்மணி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் காவல் ஆணையராக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் காவல் ஆணையராக ஜோஷி நிர்மல்குமார், சிலை கடத்தல் தடுப்பு ஐஜியாக அனில்குமார் கிரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சட்டம், ஒழுங்கு கூடுதல் ஆணையராக கபில் குமார் சரத்கர் நியமிக்கப்பட்டுள்ளார். சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கடலோர பாதுகாப்புக் குழு ஐஜியாக பிரவேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையராக சாமுண்டீஸ்வரியை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக மகேஷ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காவல்துறை விரிவாக்க பிரிவு ஐஜியாக துரை குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
