காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் கொரோனா பாதிப்பால் 499 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: தமிழகத்தில் முதல் கொரோனா பாதிப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓமன் நாட்டில் இருந்து திரும்பி வந்தபோது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் கொரோனா பாதிப்பால் 499 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் முதலில் கொரோனா பாதிப்பு காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஒமன் நாட்டில் இருந்து காஞ்சிபுரம் வருகை தந்தபோது தொற்று உறுதியானது இதனை தொடர்ந்து அவருடைய உறவினர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தினர். சரியாக கடந்த ஒரு ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6 லட்சத்தும் அதிகமானோர்க்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 29 ஆயிரத்து 648 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, 29 ஆயிரத்து 091 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கடந்த ஒரு ஆண்டில் 499 பேர் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக சென்னைக்கு அருகே உள்ள குன்றத்தூர் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. எனவே, பொதுமக்கள் முககவசம் மற்றும் சமுக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>