ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.20 லட்சம் பணம் பறிமுதல்

உத்திரமேரூர்: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் நேற்று உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கூட்ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த சோலை (35) என்பவரது காரினை பறிசோதனை செய்த போது முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.20 லட்சம் பணத்தினை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>