மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு கல்லூரி நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு செயல் அலுவலர் விஜயராஜ், கல்லூர் துணை முதல்வர் ரம்யா, பொறியியல் கல்லூரி முதல்வர் சேகர், மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலர் ஆண்டனி வாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவியல் துறை தலைவர் மன்ஜிபாஷினி வரவேற்றார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கல்லூரி இளங்கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளைச் சேர்ந்த இறுதி ஆண்டு மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் 27 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு டெக் மஹிந்திரா நிறுவன பணியில் சேர்வதற்கான ஆணையை பெற்றுக்கொண்டனர். இந்த வேலைவாய்ப்பு முகாமை ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் பிரவிந்த் ஒருங்கிணைத்தார்.

Related Stories:

>