பறக்கும் படை கட்டுப்பாட்டு அறைக்கு தனியார் மயத்தை கண்டித்து வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் தர்ணா

திருச்சி, மார்ச் 9: 2 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும். இதேபோல் ஐடிஎபி வங்கி தனியார் மயமாக்கப்படும், ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் 74 சதவீதம் வரை அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து, பொதுப்பணித்துறை தனித்துறை வங்கிகளில் பணிபுரியும் 10லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் இணைந்து வங்கி தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைப்பு சார்பில் வரும் 15, 16ம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.இதையொட்டி தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம், தர்ணா, கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது என பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

அதன்படி தமிழகத்தில கடந்த பிப்.16ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டங்கள் வரும் வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. அந்த வகையில் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நேற்று வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க பொது செயலாளர் ராமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். போராட்டத்தை ஏஐடியூ மாவட்ட செயலாளர் சுரேஷ் துவக்கி வைத்தார். தர்ணா போராட்டம் காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 1 மணி வரை நடந்தது. இதில் அரசுத்துறை வங்கி ஊழியர்கள், தனியார்த்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: