திருச்சியில் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய மூதாட்டி

திருச்சி,மார்ச்.9: திருச்சியில் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் கயிற்றை கட்டி மீட்டனர். திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே உள்ள திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் நடராஜன் மனைவி சீதாலட்சுமி (80). இவரது கணவர் இறந்து விட்டார். மகனுடன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் பின்புறம் 30 அடி ஆழத்தில் கிணறு உள்ளது. அதில் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது. கிணற்றின் சுற்றுச்சுவர் 3 அடி வரை இருந்தது. இந்நிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் மூதாட்டி கிணற்றில் விழுந்து தத்தளித்தார். இதையறியாத மகன், தனது தாயை தேடி அழைத்து, சந்தேகத்தின் பேரில் கிணற்றை எட்டிபபார்த்தார். அப்போது கிணற்றில் தனது தாய் உயிருக்கு போராடுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி, மூதாட்டியை கயிற்றால் கட்டி, கயிற்றை மேலே இழுத்து மூதாட்டியை மீட்டனர். வயதாகி விட்டதால் ஏன் உயிருடன் இருக்க வேண்டும் என சீதாலட்சுமி அடிக்கடி புலம்பி கொண்டிருந்தாக கூறப்படுகிறது. மூதாட்டி சீதாலட்சுமி அடிக்கடி கிணற்று பகுதியில் நின்று கொண்டு கிணற்றை எட்டிப் பார்த்து கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் தவறி விழுந்தாரா, அல்லது தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் விழுந்தாரா? என்ற கோணத்தில் கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி, மார்ச்.9: திருச்சிமாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக கண்காணிக்க ஏதுவாக பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் இயங்கும் வண்ணம் 8 மணி நேரத்திற்கு ஒரு குழு வீதம் நாளொன்றுக்கு மூன்று குழுக்கள் சுழற்சி முறையில் (காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மற்றும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை) நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பறக்கும் படை மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு (அடைப்புக்குறியில்) தொலைபேசி வாயிலாகவும், செயலி மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.

அதன்படி, மணப்பாறை 9498747800,( 9498747809), ரங்கம் 9498747801, (9498747810) திருச்சி (மேற்கு) 9498747802, (9498747811) திருச்சி (கிழக்கு) 9498747803, (9498747812), திருவெறும்பூர் 9498747804, (9498747813), லால்குடி 9498747805, (9498747814)

மண்ணச்சநல்லூர் 9498747806, (9498747815), முசிறி 9498747807 (9498747816), துறையூர் (தனி) 9498747808, (9498747817).மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 1800 425 1265 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் ஏதுமிருப்பின் மேற்படி கட்டணமில்லா எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.

Related Stories: