×

மக்கள் அதிகாரம் போராட்டம் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் தபால் வாக்கு செலுத்த விரும்புபவர்கள்

திருச்சி, மார்ச்.9: அஞ்சல் வாக்கு செலுத்த விரும்புபவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை வரும் 16ம்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வருகை தர இயலாத வாக்காளர்களுக்கு அஞ்சல் வாக்கு (படிவம் 12டி) வழங்குவதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (பிஎல்ஓ) அறிவுரை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் நேற்று நடந்தது. திருச்சி கலெக்டர் சிவராசு தலைமை வகித்து பேசியதாவது:தேர்தல் பணிபுரியும் அலுவலர்கள் தவிர கீழ்கண்ட வகைபாடு உடைய வாக்காளர்களுக்குத் தபாலில் வாக்கு அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

அதன்படி 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வருகை தர இயலாத வாக்களர்களின் பட்டியல் பாகம் வாரியாக வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு வழங்கப்படும். பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்காளர்கள் அஞ்சல் வாக்கு அளிப்பதற்கு ஏதுவாக அவர்களின் இல்லங்களுக்கே சென்று படிவம் 12டி வழங்கப்பட வேண்டும். பட்டியலில் குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் படிவம் 12டி வழங்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். அஞ்சல் வழி வாக்களிக்க விருப்பமுள்ளதா அல்லது விருப்பமில்லையா என்ற விபரத்தினையும் வாக்காளரிடம் கேட்டு பதிவேட்டில் பதிலுக்கு ஏற்றவாறு கலம் 10அல்லது கலம் 11ல் தேதியுடன் கையொப்பம் பெற வேண்டும்.

அஞ்சல் வழி வாக்கு செலுத்த விருப்பும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முழு புத்தகத்தினையும் ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள தெரிவிக்க வேண்டும். அஞ்சல் வழி வாக்களிக்க விருப்பம் தெரிவித்த வாக்காளர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 16ம் தேதிக்குள் திரும்ப ஒப்படைக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அஞ்சல் வாக்கு செலுத்த இயலும் என்பதைத் தெரிவிக்க வேண்டும். வீடு தேடி செல்லும் போது, வாக்காளர் இருந்தாலும், இல்லையென்றாலும், இறந்திருந்தாலும் அதை பதிவு செய்ய வேண்டும். பூர்த்தி செய்த 12டி படிவங்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தினமும் ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 12டியினை பெற கடைசி நாள்: 16.03.2021. படிவம் 12டியில் பெற்ற விபரங்களை பகுதி வாரியாக ஒரு தொகுப்பாக தயாரிக்க வேண்டும் என்றார்.

திருச்சி, மார்ச் 9: திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன், மகளிர் தினத்தை முன்னிட்டு, மக்கள் அதிகாரம் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கண்டன குரல் எழுப்பும் போராட்டம் நேற்று நடந்தது. மக்கள் அதிகார மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் நிர்மலா தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பெண்கள் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு ராஜா, ஆனந்த், திராவிட கழக மாவட்ட தலைவர் ஆரோக்கிய தாஸ், மக்கள் கலை இயக்க கழக மாவட்ட தலைவர் ஜீவா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை 16ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி