வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி மு.க.ஸ்டாலின் தலைமையில் விடியலுக்கான முழக்கம் திருச்சி பொதுக்கூட்டத்தில் திரளாக பங்கேற்ற திமுகவினர்

முசிறி, மார்ச் 9: திருச்சியில் திமுக கட்சியில் சார்பில் விடியலுக்கான முழக்கம் பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தினால் கட்சித் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது . மேலும் கூட்டத்தில் திமுக தலைவர் மு .க .ஸ்டாலின் பத்தாண்டு கால தொலைநோக்கு திட்டங்கள் குறித்து பேசினார். இக்கருத்துகள் பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் திமுகவில் முக்கிய பங்கு வகிக்கும் திமுக முதன்மைச் செயலாளர் கே. என். நேருவை லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின் நேருக்கு நிகர் நேருதான் என புகழ்ந்து பேசியது திருச்சி திமுகவினர் இடையே மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ், பொய்யாமொழி எம்எல்ஏ.திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் கருணாநிதி , நிர்வாகி ஜெர்மன் அந்தநல்லூர் துரைராஜ்,முன்னாள் வனத்துறை அமைச்சர் மகனும்,கழக உறுப்பினருமான கருணைராஜா,மண்ணச்சநல்லூர் கதிரவன்,மாவட்ட கவுன்சிலர்கள் கே. பி கே. சுந்தரராஜன் கிருஷ்ணமூர்த்தி, தீபா சின்னராஜ், தமயந்திபிரபு, கிருத்திகா, தனபால், ஒன்றிய குழு தலைவர்கள் புனித ராணி, சர்மிளா பிரபாகரன், மாலா ராமச்சந்திரன், குணசீலம் ஊராட்சி மன்ற தலைவர் குருநாதன்,மருங்காபுரி ஒன்றியக் குழு தலைவர் பழனியாண்டி , தெற்கு மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு அமைப்பாளர் அருள் சுந்தரராஜன், மாவட்ட கவுன்சிலர் பாலசுப்பிரமணி, நிர்வாகிகள் பொறியாளர் சீனிவாசகன், மிலிட்டரி முருகன், பொதுக்குழு உறுப்பினர் குழந்தைவேல், லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய சேர்மனுமான ரவிச்சந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன் புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராசா, புள்ளம்பாடி ஒன்றிய சேர்மன் ரசியா கோல்டன் ராஜேந்திரன், திருச்சி வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் துரை கந்தசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், இளங்கோவன் மற்றும் முன்னோடி பொறுப்பாளர்களும் ,நிர்வாகிகளும் ஏராளமான வாகனங்களில் தொண்டர்களுடன் சென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories: