விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் மயில்கள்: விவசாயிகள் கவலை

 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே விளை நிலங்களில் மயில்கள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த வனத்தில் இருந்து வெளியேறும் யானை, வரையாடு, மான், மயில், குரங்கு உள்ளிட்ட விலங்குகள், சில நேரத்தில் அருகே உள்ள கிராம பகுதி தோட்டங்களில் புகுந்து உணவை உண்டு பின், வனத்திற்குள் சென்று விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதில், செமனாம்பதி, சேத்துமடை, போத்தமடை, வேட்டைகாரன்புதூர், அங்கலக்குறிச்சி, அம்பராம்பாளையம், ஜமீன்ஊத்துக்குளி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மயில்கள் அதிகம் உலா வருகிறது. அதிகாலை நேரத்தில், மக்கள் நடமாட்டம் குறைவான நேரத்தில், உணவை தேடி மயில்கள் விளை நிலங்களில் அலைகிறது.

வனத்தையொட்டிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து, அங்கு சாகுடி செய்யப்படும் நிலக்கடலை, மக்காசோளம், கிழங்கு உள்ளிட்ட பலவற்றை உண்டு செல்கிறது. தோட்டங்களில் மயில்கள் அதிகளவில் உலா வருவதால், பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க, பகல்,இரவு என விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை கண்காணித்து வருகின்றனர். மேலும், கிராம பகுதியில் மயில்கள் உலா வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: