தெற்கு காந்திகிராமம் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு

கலெக்டர் துவக்கி வைத்தார்

போர்வெல் பம்பு பழுதால்

கரூர், மார்ச் 9: கரூர் நகராட்சிக்குட்பட்ட தெற்கு காந்திகிராமம் பகுதியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இந்த பகுதியில் உள்ளன. இந்நிலையில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தின் மையப்பகுதியில் மிடில் மைதான பகுதி உள்ளது. இதனை சுற்றிலும் அதிகளவு குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியினர் பயன்பாட்டிற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தரப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சுவிட்ச் பெட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து மற்றும் அருகில் உள்ள மோட்டார் பம்பு பழுது போன்ற காரணங்களால் கடந்த சில மாதங்களாக சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் வருவதில்லை. இதன் காரணமாக உபரி தண்ணீர் பயன்பாடு இன்றி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த பிரச்னை குறித்து பகுதி மக்கள் நகராட்சியின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: