×

வேட்டவலம் அருகே வியாபாரியிடம் ₹62 ஆயிரம் பறிமுதல்

வேட்டவலம், மார்ச் 9: வேட்டவலம் அடுத்த தளவாய்குளம் கூட்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த அன்பரசு மற்றும் எஸ்எஸ்ஐ ஜோதி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ₹62 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. பின்னர் லோடு ஆட்டோவில் வந்தவரிடம் விசாரணை நடத்தியபோது, சேத்துப்பட்டு அடுத்த தச்சாம்பாடி கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன்(62) என்பதும், வியாபாரத்திற்கு பணம் கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Vettavalam ,
× RELATED உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ₹1.35...