சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 479 துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு

ஊட்டி, மார்ச் 9: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொழிலதிபர்கள், விவசாயிகள் என 541 பேர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். தேர்தல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியது.அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் நீலகிரி மாவட்டம் முழுவதும் 479 துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். 47 துப்பாக்கிகள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் விரைவில் ஒப்படைக்க வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories:

>