திருவனந்தபுரத்தில் பினராயி விஜயன் மகள் வங்கி லாக்கரில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

 

திருவனந்தபுரம்: கொச்சியில் உள்ள சிஎம்ஆர்எல் தாது மணல் நிறுவனத்திடம் இருந்து கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் முறைகேடாக ரூ. 2.78 கோடி பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையும், தீவிர மோசடி விசாரணை அலுவலகமும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக கடந்த 17ம் தேதி வீணா விஜயனிடம் கொச்சி அலுவலகத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 மணிநேரம் விசாரணை நடத்தினர். இவருடைய வாக்குமூலத்தில் ஏராளமான முரண்பாடுகள் இருந்ததை தொடர்ந்து அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் வீணா விஜயனின் திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் வங்கியில் உள்ள லாக்கரில் அமலாக்கத்துறை நேற்று திடீர் சோதனை நடத்தியது. வீணா விஜயனின் முன்னிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மதியம் 1 மணி வரை நீடித்தது. லாக்கரிலிருந்து ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து அமலாக்கத்துறை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

Related Stories: