அலங்கார பல்பு வெடித்து 4 பேர் காயம்

கோவை, மார்ச்.9:  கோவை ரேஸ்கோர்ஸ் நடைபயிற்சி தளத்தில் கோவை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடக்கிறது. நேற்று இரவு அலங்கார பல்புகள் பொருத்தும் பணி நடந்தது. 4 அடி உயரத்தில் பில்லர் தூண் அமைத்து அதில் சுமார் 10 அடி உயரமுள்ள பல்புகளை நிறுத்தி வைக்கும் பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பல்பு திடீரென சத்தத்துடன் வெடித்தது. இதில் பணியில் இருந்த 4 தொழிலாளர்கள் கண்ணாடி துகள்கள் சிதறியதில் காயமடைந்தனர். அலங்கார பல்புகளில் காஸ் நிரம்பியிருப்பதாக தெரிகிறது. பணி செய்யும்போது காஸ் அழுத்தம் காரணமாக வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. காயமடைந்த தொழிலாளர்கள் காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக ரேஸ்ேகார்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>