தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

ஈரோடு,மார்ச்9:அனைத்து கட்சியினர் முன்னிலையில் ரேண்டம் முறையில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு,ஈரோடு மேற்கு,மொடக்குறிச்சி,பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர், பெருந்துறை ஆகிய 8 தொகுதிகளில் 2,741 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வாக்குசாவடிகளுக்கு தேவையான வாக்குபதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும்பணி நேற்று நடைபெற்றது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில், கலெக்டர் கதிரவன் ரேண்டம் அடிப்படையில் வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேடு மெஷின்களை ஒதுக்கீடு செய்தார்.

அப்போது கலெக்டர் கதிரவன் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 4779, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 3746, யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் விவிபேடு மெஷின்கள் 4088 என மொத்தம் 12 ஆயிரத்து 613 ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முதல்கட்ட சரிசார்ப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், 11 ஆயிரத்து 906 இயந்திரங்கள் பயன்படுத்த தகுதியானவை என்று சான்றிழ் வழங்கப்பட்டது. இதில் 411 இயந்திரங்கள் பயிற்சி மற்றும் வாக்காளர் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மீதமுள்ள 11495 இயந்திரங்கள் ரேண்டம் அடிப்படையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு தேவையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தொகுதிக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு பேசினார்.

Related Stories: