கொரோனா பரவல்: கலெக்டர் எச்சரிக்கை

ஈரோடு,மார்ச்9: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கலெக்டர் கதிரவன் பேசியதாவது: கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்துக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. எனவே அரசியல் கட்சியினர், அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும். சமீப காலமாக மக்களிடம் கொரோனா அச்சம் இல்லாமல் மாஸ்க் அணியாமல் செல்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பினர் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாஸ்க் அணியாமல் செல்வோர், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருக்கும் இடங்களில் அபராதம் விதிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சி நிர்வாகம் மூலம், கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அரசியல் கட்சியினரும் பொதுமக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பிட்ட இடத்தில் அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டால் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். அந்த பகுதியில் அரசியல் கட்சியினர் யாரும் நேரில் சென்று வாக்கு சேகரிக்க அனுமதி இல்லை. இவ்வாறு கலெக்டர் கதிரவன் பேசினார்.

Related Stories: