×

துவரங்குறிச்சி அருகே கார் மோதி பெண் பலி

மணப்பாறை, மார்ச் 8: துவரங்குறிச்சி அருகே கார் மோதி ஆடு மேய்த்த பெண் பலியானார். மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகேயுள்ள எக்கச்சிமேடு பகுதியை சேர்ந்தவர் வீரன். இவரது மனைவி நல்லி(56). இவர் நேற்று சாலையோரம் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தபோது, மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் நல்லி மீதும், அவரது ஆட்டின் மீதும் மோதியது. இதில், ஆடு சம்பவ இடத்திலேயே இறந்தது. நல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Durangurchi ,
× RELATED திருச்சியில் இன்று மின்தடை