அனைத்து செலவினங்களையும் தேர்தலுக்காக துவக்கப்பட்ட வங்கி கணக்கு மூலமே செய்ய வேண்டும்

திருவாரூர், மார்ச் 8: தேர்தலுக்கான அனைத்து செலவுகளையும் தேர்தலுக்காக துவக்கப்பட்ட வங்கி கணக்கு மூலமே செய்ய வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தா அறிவுறுத்தி உள்ளார்.

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொது தேர்தல் செலவினங் களுக்காக தயார் செய்யப்பட்ட விலைப்பட்டியல் குறித்து அனைத்து அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சாந்தா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தா பேசுகையில், சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தலுக்காக மேற்கொள்ளப்படும் செலவினம், தேர்தல் செலவினம் எனப்படும். வேட்புமனு தாக்கல் செய்யும் நாளிலிருந்து தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள்வரை மேற்கொள்ளப்பட்ட செலவினம் வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்காக கருதப்படும். அதன்படி இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி சட்டமன்ற தேர்தல் செலவிற்கான உச்ச வரம்பு ரூ.30.80 லட்சம் ஆகும்.

ஒவ்வொரு வேட்பாளர் அல்லது அவரின் முகவர் வேட்புமனு தாக்கல் செய் யப்பட்ட நாளிலிருந்து, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள்வரை மேற் கொள்ளப்பட்ட செலவீனத்தினை தனியாக பராமரிக்க வேண்டும். வேட்பாளர் ஒவ்வொருவரும், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தன்னுடைய தேர்தல் செலவுக் கணக்குகளின் ஒரு நகலை தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் செலவினங்களுக்காக ஒவ்வொரு வேட்பாளரும் தனியாக வங்கிக் கணக்கு துவங்கப்பட வேண்டும். தேர்தல் முடிவு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் செலவின் உண்மையான கணக்கை அளிக்க வேண் டும். தேர்தலுக்கான அனைத்து செலவுகளையும், தேர்தலுக்காக துவங்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து மட்டுமே செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் பிரசாரத்திற்காக அவரால் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்கள் பற்றிய தகவல்களை மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அளித்து அவற்றை பயன்படுத்துவதற்கான அனுமதியினை தேர்தல் நடத்தும் அதிகாரியிடமிருந்து பெற வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட வாகன பயன்பாட்டிற்கான அனுமதியினை வாகனத்தின் முன்பக்கத்திரையில் காட்சிக்கு தெரியுமாறு வைக்க வேண்டும். மேலும் அனைத்து பதிவேடு, தேர்தல் பிரச்சார காலத்தில் குறைந்தது மூன்று முறையாவது தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது தேர்தல் செலவின பார்வையாளரின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அனைத்து பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் வீடியோ படப்பிடிப்பு செய்யப்படும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வேட்பாளரின் தேர்தல் செலவின ங்கள் குறித்து கண்காணிக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் சாந்தா தெரிவித்தார். கூட்டத்தில், டிஆர்ஓ பொன்னம்மாள், ஆர்டிஓக்கள் பாலசந்திரன், அழகர்சாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சந்தானகிருஷ் ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: