தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவுறுத்தல் பங்குனி பிரமோற்சவ 4ம் நாள் விழா மன்னை ராஜகோபால சுவாமி கோயிலில் கண்ணன் கோலத்தில் பெருமாள் சேவை திரளான பக்தர்கள் தரிசனம்

மன்னார்குடி, மார்ச் 8: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனி பிரமோற்சவ பெருவிழாவின் 4ம் நாளான நேற்று பெருமாள் கண்ணன் கோலத்தில் தங்க கோவர்தனகிரி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழகத்தில் புகழ் பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான ராஜகோபால சுவாமி கோயிலில் 18 நாள் பங்குனி பிரமோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4ம் நாளான நேற்று உற்சவர் பெருமாள் பல்லக்கு சேவையில் கோயிலிருந்து புறப்பட்டு மேல ராஜவீதி நான்கு சாலை சந்திப்பு வரை வந்து பின்னர் அங்கிருந்து திரும்பி கோயிலின் இடதுபுறம் வானமாமலை மடம் வந்தார். அங்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்றன. பின்னர், பெருமாள் கண்ணன் திருக்கோலத்தில் தங்க கோவர்தனகிரியில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

>