×

வலங்கைமான் அருகே வீட்டு பூட்டை உடைத்து 32 பவுன் நகை கொள்ளை

வலங்கைமான், மார்ச் 8: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பறவைக்குளம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஆவரணம்(50). இவருக்கு 2 மகன்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது. கடந்த 5ம் தேதி மகன்கள், மருமகள்களுடன் ஆவரணம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றார். தரிசனம் செய்து விட்டு நேற்று காலை வீடு திரும்பினர். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 32 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. வீட்டில் ஆளில்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து கைவரிசை காட்டி உள்ளனர். இதுபற்றி ஆவரணம் அளித்த புகாரின் பேரில், வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags : Valangaiman ,
× RELATED மதுரையில் பட்டப்பகலில் துணிகரம்...